அசுரபார்வை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து பதிவாகிறது.

Sunday, June 17, 2007

தக்காளி சைவமா? அசைவமா?

இந்தியாவானது இங்கிலாந்தின் நேரடி கட்டுப்பாட்டின் காலனி அடிமை நாடாக இருந்த போது ஒருமுறை வெள்ளையர் படையிலிருந்த இந்திய வீரர்கள் கடுமையான கலவரத்தில் ஈடுபட்டனர். அதற்கு காரணம் என்ன தெரியுமா!
படைவீரர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகளில் உராய்வு எண்ணெயாக பன்றிக்கொழுப்பும், பசுக்கொழுப்பும் பயன்படுத்த அளிக்கப்பட்டதாக சொல்லப்பட் டது தான். பன்றிக்கொழுப்பை பயன்படுத்துவதற்கு எதிராக இஸ்லாமிய வீரர்களும், பசுக் கொழுப்பை பயன்படுத்துவதற்கு எதிராக இந்து வீரர்களும் மிக பெரிய கலவரத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் இப்போதோ நம்மு டைய அனுமதியின்றியே நமது சைவ உணவுகளை ளெல்லாம் இனி அப்படி சொல்ல முடியாத வகையில் மரபீனி மாற்றம் செய்யப்படுகின்றன.
பருத்தியில் மட்டும் 40-வகை யானவை உருவாக்கப்பட்டுள்ளன. நம் அன்றாட உணவான நெல்லில் கூட பூச்சிகளை எதிர்ப்பவை, வைட்டமின் எ சத்துடையவை, உப்பு நீரிலே விளையகூடியவை என்று பல்வேறு வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நமது சமையலறையில் இடம்பிடித்துள்ள தக்காளியும், கத்தரிகாயும் கூட இவர்களின் தொழில்நுட்ப வெறிக்கு தப்பவில்லை.
இவர்களின் மரபீனிப் பொறியியல் தொழில் நுட்பத்தை எதிர்பாராதது, சரிசெய்ய இயலாது, இயற்கைக்கு மாறானது என்ற 3 சொற்களில் கூறிவிடலாம்.
ஒரு தாவரம் அல்லது விலங்கின் செல்லின் இயற்கை யான மரபீனிக் கட்டமைப்பை சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நம் விருப்பத்திற் கேற்ப மாற்றி அமைப்பது. அதாவது, சில பூச்சிகளை எதிர்க்கும் திறன் படைத்த, சில களைக்கொல்லிகளைத் தாங்கும் திறன்படைத்த தாவரங்களை உருவாக்குவது. அதிக புரதச் சத்து கொண்ட காய்கறிகள் தயாரிப்பு . மனிதகுல வரலாற் றில் முதன்முதலாக இயற்கை யான பரிணாம உருவாக்கத்தை தனது சுயநலனுக்காக மனிதர் கள் பயன்படுத்த முனைகின் றனர். உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த மிகச் சிக்கலான மரபீனிக் கட்டமைப்பை மாற்றி தாவர, விலங்கு உருவாக்கம் செய்கின்றனர்.
எதிர்பாராதது: மிகச்சிக்க லானதான மரபீனிக் கட்டமைப் பை சிதைப்பததன் மூலம் நாம் எதிர்பார்க்கும் விளைவுதான் ஏற்படும் என்று உறுதியாகக் கூற இயலாது. ஏனென்றால் அதன் செயல்பாட்டை முற்றிலும் நாம் கட்டுப்படுத்த இயலாது. அது உத்தேசமாகவே செயல்படுகிறது. கணக்கு போல ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது இங்க பொருந்தாது. ஒன்றும் ஒன்றும் பதினொன்றாகவும் ஆகலாம். புதிதாக நுழைக்கப்பட்டுள்ள மரபீனியானது இயற்கையாகஉள்ள மரபீனியை தொந்தரவு செய்ய லாம். இதனால் பதற்றமான சூழல் உருவாகலாம். (இத்தகையதொரு பதற்றமே அணுக்கதிர்வீச்சுக்கு காரணம்). அல்லது நாம் எதிர்பாராத வேறொரு விளைவு உருவாகலாம். இதனால் ஒரு புதிய நச்சு உருவாகி ஒவ்வாமை யை ஏற்படுத்தலாம்.
திரும்ப இயலாது: இவ்வாறு மரபீனி மாற்றப்பட்ட பயிரினங் கள் அல்லது உயிரினங்கள் சூழலில் அனுமதிக்கப்படுவது என்பது சூழலுக்கும் உணவுச் சங்கிலிக்கும் அச்சுறுத்தலாகும். அயல் மகரந்தச் சேர்க்கை மூலமாக இந்த புதிய பயிரின் தன்மைகள் பிற பயிர்களுக்கும் பரவலாம். இதன்விளைவாக எதிர்காலத்தில் மரபீனி மாசுபாடும் உருவாகலாம். இதனால் ஏற்படும் சிக்கல்களை இப்போதே அளவிட்டுவிடமுடியாது.
இயற்கைக்கு மாறானது: இதனால் இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் நம் கற்பனைக்கும் எட்டாதது. கோதுமையில் பசுவின் மரபணு இருக்கலாம், உருளைக்கிழங்கில் சிலந்தியின் மரபணு இருக்கலாம். இது இயற்கையில் எப்போதும் நடவாதவொரு விசயமாகும்.
மரபீனி மாற்ற தொழில்நுட்ப முறையில் எவ்விதமெல்லாம் உணவுப்பொருட்கள் உருவாக்கப் படுகின்றன என்பதைக் கேட்டால் நமக்கு தலைசுற்றும், நம்ப முடியாது. ஆனால் இவை எல்லாம் மிகதேவையானதாக பன்னாட்டு வணிக நிறுவனங்க ளால் முன் வைக்கப்படுகிறது. தக்காளியில் தண்ணீர் ஒட்டாம லும், ஊடுருவாமலும், அழுகாம லும் இருப்பதற்காக மீனின் மரபீனிகள் தக்காளியின் மரபீனி கட்டமைப்பில் செயற்கையாக புகுத்தப்படுகின்றன. தக்காளி கீழே விழுந்தால் சிதையாமலி ருக்க சிலவகை தக்காளிக்குள் கோழியின் காலிலுள்ள மரபீனிகள் புகுத்தப்படுகின்றன.
வணிகரீதியில் முதன்முதலாக உருவாக்கப்பட்ட உணவுப் பொருள் தக்காளியாகும். கால்ஜீன் என்ற நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட இதன் வணிகப்பெயர் திறீணீஸ்க்ஷீஷிணீஸ்க்ஷீ என்பதாகும். 1992ல் அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறையானது இது வெறும் தக்காளிதான், இதனால் உடல்நலனுக்கு ஆபத்து ஏதும் இல்லை. எனவே தனியான அறிவிப்பு வில்லை ஏதும் ஒட்டப்படவேண்டியதில்லை என்று அனுமதி கொடுத்தது. 1994 முதல் இது சந்தைக்கு வந்தது. நுகர்வோரிடையே பெரும் வரவேற்பும் பெற்றது.
வழக்கமான விலையைவிட 2 முதல் 3 மடங்கு அதிக விலை கொடுத்து இதனை மக்கள் வாங்கினர். என்றாலும் உற்பத்தி பிரச்சினைகள், விரைவில் அழுகுவது போன்றகாரணங்களால் இது நட்டமடைந்தது. அதோடு கால்ஜின் நிறுவனத்தை 1995ல் மான்சாண்டோ விலைக்கு வாங்கியது. 1996ல் இதே தக்காளி யின் மற்றொருவகை செனிகா நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு, அதிலிருந்து தக்காளி கூழ் தயாரிக்கப்பட்டது. அப்போது இதனை ஐரோப்பிய நுகர்வோர் ஏற்றுக்கொண்டனர். இந்நிலை பசுக்கிறுக்கு நோய் வரையிலும் நீண்டது. அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளின் வாக்குறுதிகளை நம்ப மக்கள் தயாராக இல்லை. அதன் பின்னரே மான்சாண்டோவின் ரவுண்டப்-ரெடி சோயா போன்ற தயாரிப்புகளுக்கு எதிராக ஐரோப்பிய மக்கள் அணிதிரண்டனர்.
ஒரு உணவுப்பொருளானது முழுமையாகவோ அல்லது அதில் கலந்துள்ள ஒரு பொருளோ - அதாவது மரபீனி மாற்றப்பட்ட தாவரம், விலங்கு அல்லது ஈஸ்ட் போன்ற நுண்ணுயிர்களைக் கொண்டதாக இருந்தால் அது மரபீனி மாற்றப்பட்ட உணவு என்ற சொல்லால் சுட்டப்படும். மரபீனி மாற்றப்பட்ட உணவு வகைகள் 1990கள் முதல் சந்தையில் கிடைத்துவருகின்றன. தற்போது மரபீனி மாற்றப்பட்ட சோயா பீன்ஸ், மக்காச்சோளம், கனோலா ஆகியவற்றால் தயாரிக் கப்பட்ட உணவுகள் சந்தையில் பரவலாகக் கிடைத்துவருகின்றன. அரசுகளைப் பொறுத்தவரையில் முற்றிலும் தடை, அடையாள வில்லை ஒட்டினால் போதும், வழக்கம்போல் விற்கலாம் என்ற மூன்றுவிதமான நிலைகள் காணப்படுகின்றன.
ஜப்பான் மற்றும் மேலை நாடுகளில் இத்தகைய மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பயிர் வைககள் மிக கட்டுப்பாட்டிற்கும் கண்காணிப்பிற்கும் கீழே சோதனை ரீதியாக பயிரிடப் படுகின்றன. ஆனால் இந்தியா வில் மிக சுதந்திரமாக எவ்வித கட்டுப்பாடுகளும் அற்ற நிலையில் இவை பயிரிடப் படுகின்றன. இதனால் பிற சாதாரண பயிர் வகைகளோடு இவையும் கலந்து மிக கடுமையான சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் நமது இயற்கையான சுற்றுச்சூழல் இவ்வாறு மாசுப்படுத்தப் பட்டுவிட்டால் அதனை சரி செய்வது என்பது நடக்காத கதை.
இதனால் தான் அரியானா விலுள்ள ராம்புரா கிராமத்தில் பன்னாட்டு நிறுவனமான மான்சான்டோவின் இந்திய கூட்டாளியான மகிக்கோ நிறுவனத்தால் பயிரிடப்பட்டிருந்த மரபீனி மாற்ற நெற்பயிரை இந்திய உழவர் சங்கத்தை சேர்ந்த செயல்பாட்டாளர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதுபோலவே ஈரோடு மாவட்டத்தில் பயிரிடப் பட்டிருந்த மரபீனி மாற்ற நெற்பயிரை தமிழக உழவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பிடுங்கி அழித்தனர். ஆந்திரா விலும் இதுபோல உழவர்களின் போராட்டம் தீயிட்டு கொளுத்துமளவிற்கு தொடர்ந்தது.
மரபீனி மாற்ற உணவு வகைகளால் உடல்நலனுக்கு எவ்வித தீங்கும் இல்லையென்று உலகில் எப்பகுதிகளிலும் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. அதேவேளை இதனால் ஏற்படும் ஒவ்வாமை போன்ற உடனடி நோய்கள், மற்றும் நீண்டகால பயன்பாட்டால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த ஆய்வுகளும் முடிவுகளும் அவ்வப்போது வெளிவந்து உலகை மிரட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இலாப வெறிப்பிடித்து அலையும் பன்னாட்டு வணிக நிறுவனங்களுக்கு மக்களின் உடல்நலனை குறித்து ஏது அக்கறை? அவர்களின் நோக்கம் எல்லாம் தம் பணப்பெட்டியை நிரப்புவதிலே இருக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சித்தமருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளில் தோல்நோய் உள்ளிட்ட சிலவகை நோய்களுக்கும் சிலவகை மருந்துகளுக்கும் மீன், கோழி, பன்றி, மாடு முதலியவற்றின் இறைச்சிகளை உண்பது பத்தியமாக தடைச்செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இவற்றின் மரபீனிகளை பயன்படுத்தி புதிய சைவ உணவுகள் உருவாக்கப்படும்போது அவற்றை எவ்வாறு இனம்பிரித்து அறிவது? அவற்றால் ஏற்படும் உடல்நலக்கேடுகளுக்கு யார் பொறுப்பு இந்த புதிய வகை காய்கறிகளை உண்பவர்களை சைவம் என்று அழைப்பது வேடிக்கையாக இல்லையா?.
ஆக நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளைக்கூட பயன்படுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
உயிரியல் தொழில்நுட்பமானது இவ்வாறு பல வகைகளில் நம்மை பாதிக்கும் அதே வேளையில் மற்றொரு புறம் உயிரியல் திருட்டாகவும் வடிவெடுத்துள்ளது. நம் நாட்டின் மஞ்சள், வேம்பு, பாசுமதி அரிசி உள்ளவற்றிற்கு அன்னிய நிறுவனங்கள் காப்புறுதி பெற்றதையும், அதனை நாம் முறியடித்ததையும் அறிவோம். இன்று உலகம் தழுவிய அளவில் குறிப்பாக வளமான மூன்றாம் உலக நாடுகளை குறிவைத்து பன்னாட்டு நிறுவனங்கள் உயிரியல் திருட்டில் ஈடுபடுகின்றன.
ஆக, இத்தகைய நவீன வடிவில் வரும் ஆபத்தான மரபீனித் தொழில்நுட்பம் போன்றவற்றை புறகணித்தவிட்டு, நம் பாரம்பரிய வேளாண் முறைகளை முன்னெடுத்து செல்வதே இன்றைய காலத்தின் தேவை.

1 Comments:

Blogger Muruganandan M.K. said...

மிகுந்த தேடலுடன் எழுதப்பட்ட கட்டுரை. உங்கள் முயற்சிக்குப் பாரட்டுக்கள்.
ஆர்வத்துடன் படித்தேன்.

9:54 AM  

Post a Comment

<< Home